தலைமையாசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2021
03:09

மதுரை : அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஏப்.,30 க்குள் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.



ராமநாதபுரம் மாவட்டம் கிடாதிருக்கை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் தாக்கல் செய்த மனு:அரசு கடந்த காலங்களில் தலைமையாசிரியர்களுக்கு முதலில் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தும். பின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தும். 2020 ல் கொரோனா ஊரடங்கால் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. 2021 ல் பொது இடமாறுதல் கலந்தாய்வு மூலம் சொந்த மாவட்டத்திற்கு செல்லும் எதிர்பார்ப்பில் இருந்தேன். அதிர்ச்சியளிக்கும் விதமாக பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பொது பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.



பணியில் மூத்த தலைமையாசிரியர்கள் நடப்பு கல்வியாண்டில் பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசின் நடவடிக்கை உள்ளது. இது சட்டவிரோதம். விதிமீறல் உள்ளது. உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது பதவி உயர்வு கலந்தாய்விற்கு தடை விதிக்க வேண்டும். பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பின், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஜேக்கப் குறிப்பிட்டார். இதுபோல் பல்வேறு மனுக்கள் தாக்கலாகின.நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்: பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஏப்.,30 க்குள் நடத்த அனுமதித்து, தீர்ப்பை ஒத்திவைத்தார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X