அமைச்சரின் சொந்த தொகுதியில் தி.மு.க.,- அ.தி.மு.க., 'மல்லுகட்டு'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2021
06:31

விழுப்புரம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகத்தின் சொந்த தொகுதியான திண்டிவனத்தைகைப்பற்ற, அ.தி.மு.க.,- தி.மு.க., கட்சிகளிடையே பலத்த போட்டி எழுந்து உள்ளது.



விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சட்டசபை தொகுதியில் கடந்த 2016 தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சீத்தாபதி சொக்கலிங்கம் வெற்றி பெற்றார்.இவர், தனக்கு அடுத்தபடியாக ஓட்டுகள் பெற்ற அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரனை விட, 101 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.



குறைந்த ஓட்டுகடந்த 2016 தேர்தலில் மாவட்டத்தில், வெற்றி பெற்றவர்களில் குறைந்த ஓட்டுகள் பெற்றவர் மற்றும் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர், திண்டிவனம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கம். இவரது வெற்றியை எதிர்த்து, தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாக, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கை தள்ளுபடி செய்து, தி.மு.க., வேட்பாளர் வெற்றியை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.



கடந்த தேர்தல்




திண்டிவனம் சட்டசபை தொகுதியில் , 2016 தேர்தலில் ஓட்டுகள் விபரம்: சீத்தாபதி சொக்கலிங்கம் (தி.மு.க.,) - 61,879, ராஜேந்திரன்(அ.தி.மு.க.,) - 61,778, காளிதாஸ் (பா.ம.க.,) - 29,848, உதயகுமார் (தே.மு.தி.க.,) - 14,928, நோட்டா - 2,112, பூவழகி(பா.ஜ.,) - 1,509, புவனேஸ்வரி( நாம் தமிழர்) - 908, விஸ்வநாதன் (ஏ.ஐ.பி.எம்.கே.,) - 716, கார்த்திக் (சுயே) - 489, கோவிந்தசாமி(பி.எஸ்.பி.,)- 396, மீரா (சுயே)- 392, சந்திரசேகரன்(சுயே)- 195 ஓட்டுகள்.



சம பலத்தில் கட்சிகள்




கடந்த 1977 ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை நடைபெற்ற 10 பொதுத்தேர்தல்களில், திண்டிவனம் தொகுதியில், காங்., 4 முறை, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளன. மேலும், 1977 தேர்தலில் காங்., சார்பில் வெற்றி பெற்ற ராஜாராம், 1980 தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.



இத்தொகுதியில் வெற்றி பெற்ற மாசிலாமணி, சேதுநாதன் ஆகியோர், அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பைஇழந்தனர்.காங்., தங்கமணி (1980, 1984), அ.தி.மு.க., சண்முகம் (2001, 2006) ஆகிய இருவரும் அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளனர்.



இந்நிலையில் வரும் தேர்தலில், அமைச்சர் சண்முகத்தின் சொந்த தொகுதியான திண்டிவனத்தை கைப்பற்ற, அ.தி.மு.க.,- தி.மு.க., கட்சிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X