சங்கராபுரம் : சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் கடந்த 1962 ம் ஆண்டு பொதுத் தேர்தல் முதல் 2016 ம் ஆண்டு தேர்தல் வரை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் மற்றும் கட்சியின் நிலவரம்.சங்கராபுரம் சட்டசபை தொகுதி கடந்த, 1962ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதல் சட்டசபை தேர்தலில் காங்., சார்பில் போட்டியிட்ட பார்த்தசாரதி 26,123 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் பச்சையப்பன் 23,443 ஓட்டுகள் பெற்றார். கடந்த, 1967 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் பச்சையப்பன் 28,293 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்., வேட்பாளர் முத்துசாமி 22,774 ஓட்டுகள் பெற்றார்.கடந்த 1971 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் நாச்சியப்பன் 28,544 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்., வேட்பாளர் முத்துசாமி 28,000 ஓட்டுகள் பெற்றார். கடந்த 1977 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்., வேட்பாளர் முத்துசாமி 21,593 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் முகமது அனிப் 18,885 ஓட்டுகள் பெற்றார்.கடந்த 1980 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் கலிதீர்த்தான் 36,352 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்., வேட்பாளர் முத்துசாமி 32,811 ஓட்டுகள் பெற்றார். 1984 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் கலிதீர்த்தான் 53,162 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. , வேங்கடபதி 26,131 ஓட்டுகள் பெற்றார்.கடந்த 1989 ம் ஆண்டு தி.மு.க, வேட்பாளர் முத்தையன் 35,438 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கலிதீர்த்தான் 25,421 ஓட்டுகள் பெற்றார். கடந்த, 1991ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.,வேட்பாளர் ராமசாமி 71,688 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அருணாசலம் 26,610 ஓட்டுகள் பெற்றார்.கடந்த 1996 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் உதயசூரியன்62,673 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்டாளர் சருவர் காசீம் 40,515 ஓட்டுகள் பெற்றார். கடந்த, 2001ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் காசாம்பூ 56,971 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் உதயசூரியன் 55,953 ஓட்டுகள் பெற்றார். கடந்த 2006 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் அங்கையற்கண்ணி 62,970 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சன்னியாசி 60,504 ஓட்டுகள் பெற்றார். கடந்த, 2011ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மோகன் 87,522 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் உதயசூரியன் 75,324 ஓட்டுகள் பெற்றார்.கடந்த 2016ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க.. வேட்பாளர் உதயசூரியன் 90,920 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் 76,302 ஓட்டுகள் பெற்றார்.சங்கராபுரம் சட்ட சபை தொகுதியில் வரும் பொதுத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவும் என்பது நிச்சயம்.