ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில், 223 முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு கோவேக்சின், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்ட அளவில், 24 அரசு மையங்களில் இலவசமாக, 42 தனியார் மையங்களில், 250 ரூபாய் கட்டணத்திலும் போடப்படுகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில், 223 முதியோர் தடுப்பூசி போட்டுள்ளனர். அனைவரும் முறையாக விருப்பம் தெரிவித்து, மருத்துவ சான்றுடன் வந்து, ஊசி போட்டுக் கொண்டனர். நேற்றும், 220 பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்திருந்தனர்.