ஈரோடு: ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில், மாநகரில் போலீசார் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். காரில் சீட் பெல்ட் அணியாததாக, 18 வழக்கு, நோ என்ட்ரியில் நுழைந்ததாக நான்கு வழக்கு, இரு சக்கர வாகனத்தில் மூவர் சென்றதாக, 34 வழக்கு பதிவு செய்தனர். சீருடை அணியாமல் சென்றதாக நான்கு, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக மூன்று வழக்கு, ஹெல்மெட் அணியாததாக, 110 வழக்கு, மொபைல்போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக, 10 வழக்கு, நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தியதாக, 32 வழக்குகள் உள்பட, 229 வழக்குகள் பதிவு செய்தனர்.