ஈரோடு: தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு, பழைய ரயில்வே நிலையம் சாலையில் உள்ள முனிசிபல் சத்திரத்தில், ரீடு தொண்டு நிறுவன இயக்குனர் கருப்புசாமி தலைமையில் நடந்தது. தூய்மை பணியாளர் குழந்தைகளின் நிலை, அவர்கள் தொடர் கல்வி பயில்வது, கல்வி இடை நிற்றலை தவிர்ப்பது தொடர்பாக பேசப்பட்டது. பின், 24 மாணவ, மாணவியருக்கு, 1.20 லட்சம் ரூபாய் கல்வி தொகையாக வழங்கி, கல்வி இடைநிற்றலை தவிர்க்க யோசனை தெரிவித்தனர். ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழும தலைவர் அசோக் உட்பட பலர் பங்கேற்றனர்.