மொடக்குறிச்சி: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மொத்தம், 12 ஆயிரத்து, 262 கிலோ வரத்தானது. முதல் தரம் குவிண்டால், 13 ஆயிரத்து, 135 ரூபாய் முதல், 13 ஆயிரத்து, 686 ரூபாய் வரை விலை போனது. இரண்டாம் தரம், 9,089 ரூபாய் முதல், 13 ஆயிரத்து, 366 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 15 லட்சத்து, 1,981 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு, 17 ரூபாய் விலை அதிகரித்ததாக, விவசாயிகள் கூறினர். இதேபோல், எழுமாத்தூர் சொசைட்டியில் நடந்த, தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, 573 மூட்டை வரத்தானது. முதல் தரம், 13,205-13,899 ரூபாய்; இரண்டாம் தரம், 9,509-12,799 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 29 லட்சத்து, 95 ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும், குவிண்டாலுக்கு, 100 ரூபாய் விலை கூடியதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.