தேர்தல் பாதுகாப்பு பணியில் கர்நாடக மாநில போலீசார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2021
09:50

ஈரோடு: ''தமிழக சட்டசபை தேர்தல், ஓட்டுப்பதிவு நாளில், கர்நாடக மாநில போலீசார், பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர்,'' என்று, எஸ்.பி., தங்கதுரை தெரிவித்தார், இதுகுறித்து அவர் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பிறகு, உரிமம் பெற்று துப்பாக்கி, படைக்கலன் வைத்திருப்போர், அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில், 1,447 துப்பாக்கிகள் உள்ளன. அனைத்தும் போலீசாரால் பெறப்பட்டுள்ளன. இதில் வங்கி பண, நகை பாதுகாப்புக்காக, 58 துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவுக்காக, 939 இடங்களில் அமைக்கப்படும் ஓட்டுச்சாவடிகளுக்கு, 939 போலீசார் பணியமர்த்தப்படுவர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, 3,500 பேர் தேவை. இதில் போலீஸ் அல்லாத, 1,500 பேர் அவசியமாக பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஓட்டுப்பதிவு தின பாதுகாப்புக்கு, கர்நாடகா மாநில போலீசார் வரவழைக்கப்படுவர். பர்கூர் தட்டக்கரை, தாளவாடி எல்லக்கட்டை, புளிஞ்சூரில், தேர்தலுக்காக மதுவிலக்கு சோதனைச்சாவடி அமைக்க, கலெக்டரிடம் அனுமதி கேட்டுள்ளோம். மாவட்டத்தில், 873 ரவுடிகள் உள்ளனர். இவர்களில், 90 பேர் சிறையில் உள்ளனர். மீதமுள்ளோர் நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு எஸ்.பி., கூறினார்.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X