அந்தியூர்: ஆப்பக்கூடல் அருகே, தொழிலாளியை அரிவாளால் வெட்டி தப்பிய கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர். ஆப்பக்கூடல் அருகே ஒரிச்சேரிப்புதூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 29; கூலி தொழிலாளி. நேற்று காலை, 6:00 மணியளவில், நான்கு மர்ம ஆசாமிகள் வந்தனர். அங்கிருந்த சதீஷ்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன் விரோதத்தால் சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிவித்தனர்.