தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) என, ஐந்து சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வி.வி.பேட் இயந்திரங்கள், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் தேதி கடந்த மாதம், 26ல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தர்மபுரி மாவட்டத்திலுள்ள தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில், ஒரு தொகுதிக்கு தலா, 20 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் இயந்திரத்தை, கலெக்டர் கார்த்திகா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பு கிடங்கிலிருந்து நேற்று வழங்கினார். அப்போது, டி.ஆர்.ஓ., ராமமூர்த்தி, சப்-கலெக்டர் பிரதாப் உட்பட பலர் உடனிருந்தனர்.