தர்மபுரி: சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறையின் படி, சேலம் சரகத்தில், சொந்த ஊர்களில் பணியாற்றும் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும், எஸ்.ஐ.,க்களை இடமாற்றம் செய்ய, கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
சேலம், டி.ஐ.ஜி., கட்டுப்பாட்டில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்கள் உள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் விதிகளின் படி, சேலம் சரகத்தில் சொந்த ஊர்களில் பணியாற்றி வரும் எஸ்.ஐ.,க்கள் மற்றும் இந்த பகுதிகளில் தொடர்ந்து, மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் எஸ்.ஐ.,க்களை இடமாற்றம் செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, சேலம் டி.ஜ.ஜி., அலுவலகம் மூலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலுள்ள, போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும், சொந்த ஊர்களை சேர்ந்த எஸ்.ஐ.,க்கள் மற்றும் தொடர்ந்து, மூன்றாண்டுகளுக்கு மேல் அப்பகுதியில் பணியாற்றி வரும் எஸ்.ஐ.,க்களின் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சேலம் சரகத்தில் பணியாற்றி வரும் எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம் குறித்து, பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், இந்த பகுதிகளுக்கு விரைவில், புதிய எஸ்.ஐ.,க்கள் நியமிக்கப்பட உள்ளனர்.