காரிமங்கலம்: காரிமங்கலம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காட்சி தொடர்பியல் துறை மாணவியருக்கு, மூன்று நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. முகாமை கல்லூரி முதல்வர் கீதா துவங்கி வைத்தார். காட்சி தொடர்பியல் துறை தலைவர் கோபால், தமிழ் துறைத்தலைவர் செந்தில்குமார், வணிகவியல் துறை பேராசிரியர் செந்தில்குமார் ஆகியோர் பேசினர். மதுரை சோக்கோ கலைத்துறை இயக்குனர் பிரான்சிஸ், காட்சி தொடர்பியல் மாணவியருக்கு, வீதி நாடகம் குறித்து பயிற்சி வழங்கினார். இதில், குரல் பயிற்சி, உடல்மொழி பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முகாம், வரும், 4ல் நிறைவடைகிறது.