பென்னாகரம்: ஏரியூர் அருகே, மர்ம விலங்கு கடித்ததில், 11 செம்மறி ஆடுகள் பலியாகின. தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்த ஆரல்குந்தியை சேர்ந்தவர் கோவிந்தன், 55. இவர், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், இரவில் பட்டியிலிருந்த, 15 செம்மறி ஆடுகளை மர்ம விலங்கு கடித்துள்ளது. இதில், 11 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. நான்கு ஆடுகள் உயிருக்கு போராடி வருகிறது. தகவலின்படி பத்ரஅள்ளி பஞ்சாயத்து வி.ஏ.ஓ., பிரியா, கால்நடை மருத்துவர் நந்தினியை வரவழைத்து, பரிசோதனை செய்தார். பின்னர் இறந்த ஆடுகள், அங்கிகேயே குழித்தோண்டி புதைக்கப்பட்டன. மர்ம விலங்கு குறித்து, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.