சோழவரம்: திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகாவிற்கு உட்பட்ட, வைரம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர், 22. இவர், சகோதரரின் நண்பர், சோழவரம் அடுத்த, சிவந்தி ஆதித்தனார் நகரைச் சேர்ந்த, பெட்ரிக் செபஸ்டின், 26, என்பவர், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், பணம் வாங்கிய பெட்ரிக் செபஸ்டின், வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல், சேகரை அலைக்கழித்துள்ளார்.இது குறித்து, நேற்று முன்தினம், சேகர், சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, பெட்ரிக் செபஸ்டினை கைது செய்தனர்.