இதோ ஒரு மரம் விழுந்த கதை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2021
01:16

வடவள்ளி, : வடவள்ளியில், குடியிருப்பு பகுதியில், நேற்று முன் தினம் காலையில் முறிந்து விழுந்த ஒரு மரத்தை, அகற்ற ஆளில்லை. ஆளாளுக்கு சாக்குப்போக்கு சொல்லி, அரசுத்துறையினர் தப்பதான் பார்க்கின்றனரே தவிர, நேற்று இரவு வரை யாரும் அகற்றவில்லை.



கோவை மாநகராட்சிக்குட்பட்ட, 16வது வார்டு, வடவள்ளி, வி.எஸ்.கே., நகர், இரண்டாவது வீதி உள்ளது. இப்பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், சாலையோரத்தில் உள்ள மே பிளவர் மரத்தின் அடிபாகத்தில், கரையான் பிடித்து, சிதிலமடைந்து இருந்தது.இந்நிலையில், நேற்று முன் தினம் காலை, 8:30 மணிக்கு, அந்த மரம் அடியோடு முறிந்து சாலையில் விழுந்தது. இதில் அப்பகுதியில் உள்ள, மின் கம்பியின் மீது மரம் விழுந்ததில், மின்கம்பிகள் சேதம் அடைந்தன.அப்பகுதி மக்கள், உடனடியாக மின்சார வாரியம், மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



விரைந்து வந்த மின்சார வாரியத்தினர், மின் இணைப்புகளை துண்டித்து, மின் கம்பிகளை சீரமைத்தனர்.சாலையின் குறுக்கே, மரம் விழுந்ததால், அவ்வழியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வருவாய்த்துறையினர், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து சென்றனர்.ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வரவில்லை. பொதுமக்கள் புகார் அளித்து பல மணி நேரமாகியும், எந்த துறை அதிகாரிகளும், மரத்தை அகற்றவில்லை. இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'மரங்கள் அனைத்தும் வருவாய் துறையினர் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனால், அவர்கள் தான் அகற்ற வேண்டும். நாங்கள் அகற்ற வேண்டும் எனில், தாசில்தார் கடிதம் மூலம் மாநகராட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும்," என்றனர்.



இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், 'மரம் முறிந்து விழுந்து உள்ள இடம், முற்றிலும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. உயிர்ப்புடன் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்க மட்டுமே, வருவாய் துறையினருக்கு அதிகாரம் உள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், மரங்களை வெட்டி அகற்ற, வருவாய் துறையினருக்கு அதிகாரம் இல்லை. இதுகுறித்து, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது' என்றனர்.இப்படி ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டே இருப்பதால், நேற்று முன் தினம் காலை விழுந்த மரத்தை, நேற்று மாலை வரை யாரும் அகற்றவில்லை.



இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.அரசு துறைகள் இருப்பது, பொதுமக்களுக்கு உதவுவதற்கு தான் என்பதை, அரசு அதிகாரிகள் உணர்ந்து, இன்றாவது மரத்தை அகற்ற வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X