ரத்த உறவுகளுக்குள் திருமணமே காரணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2021
01:25

கோவை : ''ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம், தமிழகத்தில் அதிகம் என்பதால், செவித்திறன் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது,'' என்று அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் அலிசுல்தான் தெரிவித்தார்.



ஆண்டுதோறும், உலக சுகாதார அமைப்பு சார்பில், மார்ச் 3ம் தேதி செவித்திறன் நாள் அனுசரிக்கப்படுகிறது. கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின், காது மூக்கு தொண்டை பிரிவு சார்பில், உலக செவித்திறன் நாள் அனுசரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில், துறைத்தலைவர் டாக்டர் அலிசுல்தான் கூறியதாவது: இந்தியாவில் பிறக்கும், 1000 குழந்தைகளில் 2 பேர் செவித்திறன் குறைந்தவர்கள்; தமிழகத்தை பொறுத்தவரை, 1000 குழந்தைகளில் 6 பேர் என்ற அளவில் செவித்திறன் பாதிப்பு இருப்பதும் ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது.



இதற்கு, நெருங்கிய ரத்த உறவுகளில் திருமணம் செய்து கொள்ளும் நடைமுறை முக்கிய காரணமாக உள்ளது. காது கேளாமையோடு பிறந்த குழந்தைகளை ஆய்வு செய்ததில், மூன்றில் இரண்டு பங்கு நெருங்கிய உறவினர், ரத்த உறவுகளில் திருமணம் செய்தவர்களின் குழந்தை என்பது தெரியவந்துள்ளது.தாய் வழி தொற்றுகளான தட்டம்மை மற்றும் பிற தொற்றுகள், கர்ப்பகாலத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் போன்றவற்றாலும், இப்பாதிப்பு ஏற்படுகிறது.அரசு மருத்துவமனையில் இதற்கான உரிய வசதிகள் உள்ளன. காது கேளாமை குறைபாடு இருக்கும் அறிகுறி இருப்பின், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.



இந்நிகழ்ச்சியில், காது பராமரிப்புக்கான விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. சிறப்பு முகாமில், காக்லியர் இம்ப்ளான்ட்' கருவி பொருத்தப்பட்ட குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. குழந்தைகளுக்கு டீன் நிர்மலா பரிசுகள் வழங்கினார்.இதில், அரசு மருத்துவ கல்லுாரி இணை பேராசிரியர் மருத்துவர் சரவணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காது கேளாமையோடு பிறந்த குழந்தைகளை ஆய்வு செய்ததில், மூன்றில் இரண்டு பங்கு நெருங்கிய உறவினர், ரத்த உறவுகளில் திருமணம் செய்தவர்களின் குழந்தை என்பது தெரியவந்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X