கோவை : கோவை ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில், உடையக்கூடிய எலும்பு நோயுடன் பிறந்த குழந்தைக்கு, வெற்றிகரமான முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
உடையக்கூடிய எலும்பு நோயான, ஆஸ்டியோஜெனெசிஸ்பெர்பெக்டா, மாறுபட்ட மரபணு ஊடுருவலுடன் எலும்பில் கொலாஜன் உருவாவதில் குறைபாடு ஏற்படுகிறது. இதனால், பல எலும்பு முறிவுகள், மூட்டு இளகல், கண்களில் நீலநிறம் மற்றும் காதுகேளாமை போன்ற குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.இந்நோயால் பாதிக்கப்பட்ட, கேரளாவை சேர்ந்த, ஐந்து வயது குழந்தை நிஷா பேகத்திற்கு, கோவை ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவனையில், அறுவை சிகிச்சை மூலம், பல எலும்பு வெட்டுகள் மற்றும் முறுக்கப்பட்ட பாம்பை போன்ற எலும்பு சரிசெய்யப்பட்டது.
டாக்டர் ரெக்ஸ் கூறுகையில், ''வளைந்த இரு கால்களும், அறுவை சிகிச்சை மூலம் நேராக்கப்பட்டுள்ளது. இதில், எளிதில் உடையக்கூடிய, எலும்பை கையாள்வதிலும், தொலைநோக்கியுடன் வளைந்த கம்பியை உள்ளே செலுத்தி, அறுவை சிகிச்சை செய்தது, பெரும் சவாலாக இருந்தது,'' என்றார்.