கோனியம்மன் தேர் திருவிழா கோவையில் கோலாகலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2021
01:51

கோவை : கோவை கோனியம்மன் கோவில் தேர், நேற்று, 'ஓம்காளி... ஜெய்காளி...' கோஷம் முழங்க, நகர வீதிகளில் வலம் வந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.



கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிப்.,15ல் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, பூச்சாட்டு, கிராம சாந்தி, கொடியேற்றம் நடந்தது. புலி, கிளி, சிம்மம், அன்னம், காமதேனு, வெள்ளை யானை வாகனங்களில், அம்மன் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று முன்தினம் இரவு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. நேற்று காலை திருத்தேருக்கு அம்மன் எழுந்தருளினார். மதியம் 2:25 மணிக்கு, திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, நாகசக்திபீடம் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமி, தர்மராஜாபீடம் கிருஷ்ணமூர்த்தி சுவாமி தேர்வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.



பக்தர்கள் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்தது.தேர் வைசியாள் வீதியை தொடர்ந்து, கருப்பகவுண்டர் வீதி வழியாக தேர்நிலையை அடைந்தது.வழி நெடுக, பக்தர்களின் ஓம் காளி - ஜெய் காளி, ஓம்சக்தி - பராசக்தி கோஷம் முழங்கியது. இந்து அமைப்புகளை சேர்ந்த பலரும் விழாவில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 4:55 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது.துாய்மைப்பணியில் சேவாபாரதிநான்குவீதி வழியாக தேர் பயணித்தபோது பக்தர்கள் உப்பு, மிளகு, பழம் ஆகியவற்றை தேருக்கு சமர்பித்தனர். அவற்றில் சில தெருக்களில் சிதறிக்கிடந்தன.



அவற்றை தனித்தனியாக சேகரம் செய்த சேவாபாரதி அமைப்பினர், நகரின் துாய்மைக்கு முன்னுதாரணமாக செயல்பட்டனர்.குளிர்பானம், நீர்மோர் வினியோகம்தேர்த்திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பல வித குளிர்பானங்கள், எலுமிச்சை, நெல்லி, ஆரஞ்சு ஆகிய ஜூஸ் வினியோகிக்கப்பட்டது. அன்னதானம் பரிமாற அனுமதி இல்லாததால், வெஜ்பிரியாணி, தக்காளி, எலுமிச்சை உள்ளிட்ட சாதங்கள் பாக்கெட்டுகளாக வினியோகிக்கப்பட்டன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X