கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2021
01:54

விக்கிரவாண்டி:கணவனை கொலை செய்து, வீட்டில் புதைத்து, கள்ளக்காதலனோடு தலைமறைவான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.



விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் காலனியைச் சேர்ந்தவர் லியோபால், 33; வேன் டிரைவர். இவரது மனைவி சுஜித்ராமேரி, 24. இவர்களுக்கு, 5 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். லியோபாலின் தந்தை சகாயராஜ், மூத்த மகனுடன் சென்னையில் வசிக்கிறார். பிப்ரவரி, 8ம் தேதி சகாயராஜை போனில் தொடர்பு கொண்ட சுஜித்ராமேரி, '4ம் தேதி புதுச்சேரியில் நடந்த நண்பரின் திருமணத்திற்கு சென்ற லியோபால் வீடு திரும்பவில்லை' எனக் கூறினார்.



இரண்டு வாரங்கள் ஆகியும் லியோபால் வீடு திரும்பாத நிலையில், சகாயராஜ், 'போலீசில் புகார் கொடுக்கலாம். விக்கிரவாண்டி டோல்கேட்டிற்கு வந்து விடு. நான் சென்னையில் இருந்து வருகிறேன்' என, மருமகளுக்கு போன் செய்து, தகவல் தெரிவித்தார்.இதன்படி, பிப்., 21ம் தேதி சகாயராஜ், விக்கிரவாண்டி டோல்கேட்டிற்கு வந்தபோது, சுஜித்ராமேரியை காணவில்லை. வீட்டிலும் அவர் இல்லை. குழந்தைகள் மட்டும் இருந்தனர். குழந்தைகளிடம் விசாரித்தபோது, 'காலையில் இருந்து அம்மாவை காணவில்லை' என்றனர்.



சகாயராஜ், மகன் மற்றும் மருமகளை காணவில்லை என விக்கிரவாண்டி போலீசில், 23ம் தேதி புகார் செய்தார். இந்நிலையில், வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டிய தடயம் இருப்பதை கண்ட சகாயராஜ், போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.நேற்று காலை, தாசில்தார் தமிழ்செல்வி, டி.எஸ்.பி., நல்லசிவம் முன்னிலையில், சகாயராஜ் அடையாளம் காட்டிய இடத்தை தோண்டிய போது, கைகள் கட்டப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு, ரத்த காயங்களுடன் லியோபால் உடல், அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.



பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் ராதாகிருஷ்ணனுடன் சுஜித்ராமேரிக்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த லியோபால், சுஜித்ராமேரியை கண்டித்துள்ளார்.இதனால், சுஜித்ராமேரி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து லியோபாலை கொலை செய்து, வீட்டு தோட்டத்தில் புதைத்துள்ளார். பின், கணவர் காணாமல் போனதாக நாடகம் ஆடியதும், கள்ளக்காதலனுடன் தலைமறைவானதும், போலீஸ் விசாரணையில் தெரிந்தது. தனிப்படை போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X