சாத்துார்:சாத்துார் அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.அச்சங்குளம் பட்டாசு ஆலையில் பிப். 12 ல் ஏற்பட்ட வெடி விபத்தில் 23 பேர் பலியாகினர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி நடுச்சூரங்குடியை சேர்ந்த சுந்தர குருசாமி மனைவி ராஜம்மாள் 54, நேற்று இரவு 7:00 மணிக்கு இறந்தார். இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.