இரண்டு லாரிகளில் வந்த 58 ஆயிரம் புத்தகப் பைகள் நிபந்தனைகளுடன் ஒப்படைப்பு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
இரண்டு லாரிகளில் வந்த 58 ஆயிரம் புத்தகப் பைகள் நிபந்தனைகளுடன் ஒப்படைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 மார்
2021
02:06

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயலில் வாகன சோதனையில் பிடிபட்ட 58 ஆயிரம் புத்தக பைகள், தேர்தலுக்கு பிறகு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.



ராமநாதபுரம் பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் ஆனந்த்பாபு, எஸ்.ஐ. ஹெலன் அடங்கிய பறக்கும் படை குழுவினர் மதுரை - ராமநாதபுரம் ரோட்டில் வாகன சோதனையில்.ஈடுபட்டனர். அச்சுந்தன்வயலில் இரண்டு லாரிகளில் கொண்டுவரப்பட்ட 'ஸ்கூல் பேக்' பண்டல்களை பிரித்து சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர். பைகளில் ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி படங்கள் இருந்தன.



இதையடுத்து தேர்தல் விதிமீறல் என 2 லாரிகள், 3 சரக்குவாகனங்களை பறக்கும்படையினர் தடுத்து நிறுத்தினர்.தகவலறிந்த முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக உ.பி.,யிலிருந்து பிப்., 26 ல் அனுப்பப்பட்ட புத்தகப்பைகள் என விளக்கமளித்தனர்.


இருப்பினும் ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் உள்ளதால் தேர்தல் முடிந்த பிறகு பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பைகளை கல்வி அதிகாரிகளிடம் பறக்கும்படையினர் ஒப்படைத்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X