ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே, தேவர் சிலைக்கு, மேல் பகுதியில் இருந்த முருகன் சிலை, அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டது. இதை கண்டித்து, அப்பகுதியினர் மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, தளவாய்புரம் புதுார் பஸ் ஸ்டாப் பகுதியில், தேவர் சிலை உள்ளது. இதன், மேல் பகுதியில், கோவில் கோபுரம் போன்ற அமைப்பில், முருகன் சிலை இருந்தது. இச்சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சாலை மறியல் நடந்தது. டி.எஸ்.பி., நாகஷங்கர், தளவாய்புரம் எஸ்.ஐ., முத்துகுமார் ஆகியோர், குற்றவாளிகளை கண்டு பிடிப்பதாக உறுதியளித்தனர். அதன்பின், மறியலை கைவிட்டனர்.