விபத்தில் இறந்த மாணவர்: தாய்க்கு ரூ.31 லட்சம் | சென்னை செய்திகள் | Dinamalar
விபத்தில் இறந்த மாணவர்: தாய்க்கு ரூ.31 லட்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 மார்
2021
02:51

சென்னை : சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் பவீன், 18; பி.டெக் இரண்டாம் ஆண்டு மாணவர். இவர், 2017, ஆகஸ்டில், சென்னை -- பெங்களூரு நெடுஞ்சாலையில், ஆரனேரி சந்திப்பு அருகில், சைக்கிளில் சென்றுள்ளார்.



அப்போது, அதிவேகமாக வந்த லாரி, பவீன் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பவீன், சிகிச்சை பலனின்றி இறந்தார்.இந்த நிலையில், தன் மகன் இறப்பிற்கு, 60 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி, பவீனின் தாய் ஜமுனா, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை, நீதிபதி ம.சிவசக்தி முன் நடந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் மகன் இறப்பிற்கு, லாரியை அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது.



எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, 30.80 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X