மாநகராட்சி, நெடுஞ்சாலை துறைக்கு மின்வாரியம் கொடுத்தது 'ஷாக்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2021
02:59

சென்னை : சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக அமைக்கப்பட்ட நவீன மின்மாற்றியை இடம் மாற்ற, 'ஷிப்டிங் சார்ஜ்' செலுத்த மின்வாரியம் வலியுறுத்துவதால், நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.



தாம்பரம், திருவான்மியூர், ஓ.எம்.ஆர்., கிழக்கு கடற்கரை சாலை, கிண்டி போன்ற பகுதிகளுக்கு எளிதாக செல்ல, வேளச்சேரி பகுதியில் உள்ள, மூன்று பிரதான சாலைகள் முக்கிய பங்காற்றுகின்றன.வலியுறுத்தல்நுாறடி அகலம் கொண்ட இந்த சாலைகள், 150 அடி அகலமாக மாற்றப்படுகின்றன. இதற்காக, விரைவு சாலையை ஒட்டி உள்ள, 20 அடி அகல ஏரி உபரிநீர் கால்வாயை, 13 கோடி ரூபாயில் மூடு கால்வாயாக மாற்றி, சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.இந்நிலையில், வேளச்சேரியில், 40க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள், நவீன மின்மாற்றிகளாக மாற்றும் பணி நடக்கிறது.



பழைய மின்மாற்றி அருகில், சாலைக்கு இடையூறு ஏற்படாத வகையில், நவீன மின்மாற்றி அமைக்க வேண்டும் என, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை வலியுறுத்தி உள்ளது. ஆனால், விரிவாக்க சாலைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், வேளச்சேரி விரைவு சாலை, தரமணி பிரதான சாலை மற்றும் சில தெருக்களில், சாலையை மறித்து நவீன மின்மாற்றி அமைக்க, 'பில்லர்' கட்டப்பட்டது.திணறல்இதனால், சாலை விரிவாக்கத்தை முழுமையாக செயல்படுத்த முடியாமல், அதிகாரிகள் திணறினர். பில்லர் அமைக்கும் போதே, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.சாலை விரிவாக்கத்திற்கு இடையூறு இல்லாமல், மின்மாற்றி அமைக்க, பொதுமக்களும் வலியுறுத்தினர்.



பொதுமக்கள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சியின் கோரிக்கையை பரிசீலிக்காமல், பில்லர் மீது நவீன மின்மாற்றி அமைத்து, அதில் கேபிள் இணைக்கப்பட்டு வருகிறது.இது குறித்து, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கேட்டபோது, 'ஷிப்டிங் சார்ஜ்' செலுத்தினால், மின்மாற்றி இடம் மாற்றி அமைக்கப்படும் என, மின்வாரிய அதிகாரிகள் கூறி உள்ளனர்.அவர்கள் கூறியது போல், 'ஷிப்டிங் சார்ஜ்' செலுத்த அனுமதி இல்லாததால், சாலை விரிவாக்க பணியை முழுமைப்படுத்த முடியாமல், அதிகாரிகள் திணறுகின்றனர்.சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக, பழைய மின்கம்பம், மின்மாற்றி நின்றால், அதை இடம் மாற்றி அமைக்க, உரிய கட்டணம் செலுத்த வேண்டும்.



வேளச்சேரி விரைவு சாலை, தரமணி பிரதான சாலை விரிவாக்கத்தின் போது, ஒரு பழைய மின்மாற்றி இடம் மாற்ற, 6 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி உள்ளோம். அதற்கு, அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், புதிய திட்டத்தில், எங்களிடம் அனுமதி கேட்டு தான், மின்மாற்றி அமைக்க வேண்டும். அவர்கள் தவறு செய்துவிட்டு, 'ஷிப்டிங் சார்ஜ்' செலுத்த கூறுவது, எந்த விதத்திலும் நியாயம் இல்லை. ஒப்பந்த நிறுவனம், மின்வாரிய அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாகிறது.நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X