கார்பென்டர் வெட்டி கொலை | சென்னை செய்திகள் | Dinamalar
கார்பென்டர் வெட்டி கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 மார்
2021
03:02

மதுரவாயல் : நண்பரின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக, கார்பென்டரை கொலை செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.



மதுரவாயல், கங்கையம்மன் நகர், ஆறாவது தெருவை சேர்ந்தவர், சண்முகமூர்த்தி, 28. இவர் மீது, மதுரவாயல் போலீஸ் நிலையத்தில், பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர், சில மாதங்களாக கார்பென்டர் வேலை செய்து வந்தார். நேற்று இரவு, அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், சண்முகத்தை ஓட ஓட வெட்டிக் கொன்று விட்டு, தப்பினர். மதுரவாயல் போலீசார், தனிப்படைகள் அமைத்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் தப்பி ஓட முயன்றனர்.



இதில், ஆரோக்கியராஜ், 21 என்பவரை, போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரவாயலில் கொலை செய்து தப்பியது தெரியவந்தது. இதையடுத்து, ஆரோக்கியராஜை மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, மதுரவாயல் போலீஸ் தரப்பில் கூறியதாவது:மதுரவாயலில், 2017ல் ஏற்பட்ட தகராறில், சங்கர் என்பவர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில், சண்முகமூர்த்தி கைதாகி, சமீபத்தில் விடுதலையாகி உள்ளார். இதையடுத்து, சங்கரின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக, அவரது நண்பர்கள், சண்முகமூர்த்தியை கொலை செய்தது தெரியவந்தது.



இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சீனு, அந்தோணிராஜ், சுரேஷ் உள்ளிட்ட, எட்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X