திண்டிவனம்; திண்டிவனம் அருகே கூரை வீடு தீபிடித்து எரிந்ததில், ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.திண்டிவனம் அடுத்த கம்பூர் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி கன்னியம்மாள். இருவரும் நேற்று காலை வீட்டை பூட்டிக் கொண்டு ஆடு மேய்க்க சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென வீடு தீப்பிடித்து எரிந்தது. அதில், வீட்டிற்குள் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது.தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும், வீட்டில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.