தியாகதுருகம்; தியாகதுருகத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பைக்கில் சென்ற ஊராட்சி செயலாளரின் கழுத்தில் இருந்த 11 சவரன் செயினை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.தியாகதுருகம் அடுத்த குருபீடபுரத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மனைவி தவமணி,41; ஊராட்சி செயலாளர். இவர் தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகம் அருகே வாடகை வீட்டில் வசிக்கிறார்.உடல் நிலை சரியில்லாததால் தவமணி, தனது மகன் ராஜ்குமாருடன் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் பைக்கில் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்றார். பைக்கை ராஜ்குமார் ஓட்டிச்சென்றார்.பிரிதிவிமங்கலம் மணிமுக்தா ஆற்றுபாலம் அருகே சென்றபோது, அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்மநபர்கள் இரண்டு பேர், தவமணி கழுத்தில் இருந்த 4.6 சவரன் தாலி கொடியையும், 6.2 சவரன் தங்க செயினையும் பறித்துக்கொண்டு, தப்பிச்சென்றனர்.புகாரின் பேரில் தியாக துருகம் போலீசார் விசாரிக்கின்றனர்.