மயிலம்; கணபதிபட்டு கிராமத்தில், ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழுப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது. .மயிலம் ஒன்றியம் கணபதிபட்டு அரசு பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவு ஏற்படுத்த நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். மயிலம் வட்டார கல்வி அலுவலர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் சரண்யா, ஜே ஆர் சி மாநில பயிற்சியாளர், தலைமையாசிரியர் தண்டபாணி, ஜே ஆர் சி அமைப்பாளர் பாலசுப்பிரமணிய பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் என் ஓட்டு, என் உரிமை; என் ஓட்டு விற்பனைக்கு அல்ல; நான் ஓட்டு போடுவேன் என உறுதிமொழி கையெழுத்து இயக்கம் நடந்தது.நிகழ்ச்சியில் ஜே.ஆர்.சி., இணை கன்வீனர் விஜய் ஆனந்த் ,, தலைமை ஆசிரியர்கள் கோபாலகண்ணன், மாதவன் லில்லி ரோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.