மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் தபால் ஓட்டளிக்க அனுமதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2021
05:01

முதியோர், மாற்றுத்திறனாளிகள்் ஓட்டுகள் பெறபட்டியல் சேகரிப்பு பணியில் ஆளுங்கட்சியினர் தமிழக சட்டசபை தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதித்தோர் முதன் முறையாக தபால் ஓட்டளிக்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது.






விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தபால் ஓட்டுக்கள் போடலாம், விருப்பமில்லாதவர்கள் ஓட்டுச்சாவடிக்கு நேரில் வந்து ஓட்டளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மனு தாக்கல் துவங்கும் (12ம் தேதி) நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீட்டிற்கு நேரடியாக வந்து, தபால் ஓட்டளிக்க விருப்பமுள்ளவர்களிடம், அதற்கான படிவத்தை கொடுத்து பூர்த்தி செய்து வாங்கி கொள்வார்கள்.



ஓட்டுப்பதிவு (6.4.21) அன்று, தேர்தல் அதிகாரிகள் குழு நேரடியாக வந்து தபால் ஒட்டுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதியின் ஓட்டுக்களுடன் சேர்த்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்படும்.வழக்கமாக சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு தபால் ஓட்டுக்கள் வழங்கப்படும். இந்த ஓட்டுக்கள் அதிக அளவில் தி.மு.க.,விற்கு சாதகமாக இருந்து வந்தது. தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் தபால் ஓட்டுக்களை பெறுவதில் தி.மு.க.,வை போல், அ.திமு.க.,உள்ளிட்ட கட்சிகளும் போட்டி போட்டிக்கொண்டு ஆர்வம் காட்ட துவங்கிவிட்டன.முதன் முறையாக வரும் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலின் போது, 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டுக்கள் போடும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இவர்களது ஓட்டுக்களை தங்கள் கட்சி பக்கம் பெறுவதற்கு விழுப்புரம் மாவட்டத்தில் ஆளுங்கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.மாவட்டத்தில் ஏற்கனவே ஆளும்கட்சி சார்பில் அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் தனியாக பூத் கமிட்டி அமைத்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பூத் கமிட்டி நிர்வாகிகள் ஏற்கனவே தங்கள் பகுதியிலுள்ள வாக்காளர்களின் அனைத்து விபரங்களையும் சேகரித்து தயார் நிலையில் உள்ளனர்.தற்போது புதிதாக 80 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களுக்கு முதன் முறையாக தபால் ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டசபை தொகுதியிலும் உள்ள 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதித்தோர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்து வைத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.



அதன்படி மாவட்டத்தில் அ.தி.மு.க., மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள் மேற்பார்வையில், 80 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதித்தோர் பட்டியல் தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருவதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X