ஓட்டு எண்ணிக்கைக்கு மறுநாளே பிளஸ் 2 பொதுத்தேர்வு வேண்டாம் | மதுரை செய்திகள் | Dinamalar
ஓட்டு எண்ணிக்கைக்கு மறுநாளே பிளஸ் 2 பொதுத்தேர்வு வேண்டாம்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

04 மார்
2021
07:01
பதிவு செய்த நாள்
மார் 04,2021 06:47

மதுரை; 'அரசியல் சூழல் கருதி சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு மறுநாளே நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும்,' என, மதுரையில் தலைமையாசிரியர்கள் அவசர தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.



தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாநில சட்ட செயலாளர் அனந்தராமன் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் கந்தசாமி, மாநில துணை தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் கார்மேகம், பொருளாளர் ரமேஷ், துணை தலைவர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், அமைப்பு செயலாளர் குமரேசன், கள்ளர் பள்ளிகள் தலைவர் சின்னபாண்டி முன்னிலை வகித்தனர்.சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மே 2 நடக்கிறது. மறுநாள் (மே 3) பிளஸ் 2 பொதுத் தேர்வு துவக்குகிறது.தேர்தல் முடிவுகளால் மறுநாள் அரசியல், போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகள், ஆசிரியர் மாணவர் நலன் மற்றும் மனநிலையை கருத்தில்கொண்டு தேர்வு அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும்.



அல்லது மார்ச் 3 மற்றும் 4 ல் நடக்கும் தேர்வுகளை கடைசியாக நடத்தும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சட்ட செயலாளர் அனந்தராமன் கூறுகையில், “எட்டு லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 50 ஆசிரியர் தேர்வுப் பணியில் ஈடுபடுவர். தேர்வுக்கு முதல் நாள் வரை ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி உள்ளது. அரசியல் சூழ்நிலை எவ்வாறு அமையும் என தெரியாது. பொதுத் தேர்வு தேதியை மாற்ற வேண்டும்,” என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X