கடலுார் : சிதம்பரம் தொகுதியில் வன்னியர்கள், தலித்களுக்கு அடுத்தபடியாக மீனவர்கள், முஸ்லிம்கள் அதிகளவில் உள்ளனர். இத்தொகுதியில் 1952ம் ஆண்டு முதல் 1957ம் ஆண்டு வரை இரட்டை உறுப்பினர்கள் நடைமுறை இருந்தது. அதன் பிறகு 1962 முதல் ஒரு உறுப்பினர் முறைக்கு மாற்றப்பட்டது.
தொகுதியில் இதுவரை காங்., 5 முறை, தி.மு.க., 4, அ.தி.மு.க., 4, த.மா.கா., 1, மா.கம்யூ., ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.தொகுதியில் கடந்த 1952ம் ஆண்டு முதல் 2016 வரை வெற்றி பெற்றவர்களின் விபரம்:1
952ல் இரட்டை வேட்பாளர்கள் இ.காங்., அழகேசன் 33,427, இ.காங்., சுவாமி சகஜானந்தா 39,509 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர். 1957ல் இ.காங்., வாகிசம் 37,255; இ.காங்., சுவாமி சகஜானந்தா 37,089 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர்.
1962ல் இ.காங்., சிவசுப்ரமணியன் 33,438 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்த தி.மு.க., ஆறுமுகம் 23,837 ஓட்டுகள் பெற்றார். இ.காங்., 1967ல் ஆர்.கே.பிள்ளை, 34,911 வெற்றி பெற்றார். எதிர்த்த தி.மு.க., பொன் சொக்கலிங்கம் 33,356 ஓட்டுகள் பெற்றார்.
1971ல் தி.மு.க., பொன் சொக்கலிங்கம் 35,750 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். என்.ஓ.சி., சார்பில் எதிர்த்த கோபாலகிருஷ்ணன் 34,071 ஓட்டுகள் பெற்றார்.1977ல் தி.மு.க., கலியமூர்த்தி 22,917 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்த அ.தி.மு.க., முத்து கோவிந்தராஜன் 19,586 ஓட்டுகள் பெற்றார். 1980ல் அ.தி.மு.க., கணபதி 41,728 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.எதிர்த்த தி.மு.க., கலியமூர்த்தி 38,461 ஓட்டுகள் பெற்றார்.
1984ல் அ.தி.மு.க., கணபதி 47,067 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்த தி.மு.க., சுப்ரமணியன் 37,824 ஓட்டுகள் பெற்றார்.1989ல் தி.மு.க., கிருஷ்ணமூர்த்தி 35,738 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.எதிர்த்த காங்., ராதாகிருஷ்ணன் 19,018 ஓட்டுகள் பெற்றார். 1991ல் காங்., அழகிரி 48,767 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்த தி.மு.க., பன்னீர்செல்வம் 29,114 ஓட்டுகள் பெற்றார்.
1996ல் அழகிரி த.மா.கா., 52,066 வெற்றி பெற்றார்; எதிர்த்து போட்டியிட்ட காங்., ராதாகிருஷ்ணன் 23,050 ஓட்டுகள் பெற்றார்.2001ல் தி.மு.க., துரை சரவணன் 54,647 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்த பா.ம.க., அருள்செல்வன் 42,732 ஓட்டுகள் பெற்றார். 2006ல் அ.தி.மு.க., அருண்மொழித்தேவன் 56,327 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்; எதிர்த்த மா.கம்யூ., பாலகிருஷ்ணன், 39,517 ஓட்டுகள் பெற்றார்.
2011ல் மா.கம்யூ., பாலகிருஷ்ணன் 72,054 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்த தி.மு.க., ஸ்ரீதர் வாண்டையார் 69,175 ஓட்டுகள் பெற்றார்.2016ல் அ.தி.மு.க., பாண்டியன் 58,543 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார் எதிர்த்த தி.மு.க., செந்தில்குமார் 57,037 ஓட்டுகள் பெற்றார். பா.ம.க., அருள் 24,226 ஓட்டுகள், பாலகிருஷ்ணன் மா.கம்யூ., 23,314, நாம் தமிழர் சதீஷ்குமார் என்கிற பாக்கியா 1,295, பா.ஜ., மணிமாறன் 1,079 ஓட்டுகள் பெற்றனர்.
சிதம்பரம் தெகுதியில் தற்போது, ஆண் வாக்காளர்கள் 1,22,800, பெண் வாக்காளர்கள் 1,27,913, இதர 22 பேர் என, 2,50,735 வாக்காளர்கள் உள்ளனர்.
வெற்றிக்கு கடும் போட்டி
கடந்த 2016 தேர்தலில், அ.தி.மு.க., 34.66 சதவீத ஓட்டுகளும், தி.மு.க., 33.77 சதவீதம் ஓட்டுகளும் பெற்றன. அ.தி.மு.க., வெறும் 1,500 ஓட்டுக்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது தனித்து போட்டியிட்ட பா.ம.க., 14.34 சதவீதம், மக்கள் நலக் கூட்டணி மா.கம்யூ., 13.80 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளன. தற்போது தொகுதியில் அ.தி.மு.க., - தி.மு.க., நேரடியாக களம் காண தயாராகி வருகின்றன. இருந்தும் இரண்டு கூட்டணியிலும் உள்ள சில கட்சிகள் தொகுதியை தங்களுக்கு கேட்டு வருகின்றன.
அ.தி.மு.க., கூட்டணியில் தற்போது பா.ம.க., - ம.தி.மு.க., - பா.ஜ., இணைந்திருப்பது பலம். அதே சமயத்தில் தி.மு.க., கூட்டணியில் கம்யூ., காங்., வி.சி., கட்சிகள் உள்ளதால் வெற்றிக்கு கடும் போட்டி நிலவும் என்பதில் சந்தேகம் இல்லை.