விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சட்டசபை தேர்தைலையொட்டி, கடந்த 26ம் தேதி முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. அதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் சுவர் விளம்பரங்களை அழிப்பது, பொது இடங்கள் மற்றும் கூட்டம் நடத்துவதை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் அரசியல் கட்சியினர், பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் பொருட்டு, தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி லெனின் தலைமையிலான போலீசார், விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலை பெரியவடவாடியில் உள்ள தனியார் கல்லுாரி அருகே வாகன சோதனயில் ஈடுபட்டனர்.புவனகிரிகீரப்பாளையம், புவனகிரி, மந்தராக்குப்பம், சொக்கன்கொல்லை பகுதிகளில் நிலை கண்காணிப்புக்குழு ஆணையாளர் சக்தி தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.