திட்டக்குடி : திட்டக்குடி தொகுதியில் தேர்தல் அறிவிப்புக்குப்பின் அதிகாரிகள் இடம் மாறுதல் செய்யப்படுவதால் தேர்தல் பணிகள் மந்தமான நிலையில் உள்ளது.
சட்டசபை தேர்தல் தேதி கடந்த மாதம் 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், பி.டி.ஓ.,க்கள், தாசில்தார்கள் இடமாறுதல் அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் கடந்த 2ம் தேதி பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மாற்றாக நியமிக்கப்பட்டவர்கள் ஒர சில இடங்களில் இன்னும் பணி ஏற்கவில்லை.
இதே போல் தேர்தல் தேதி அறிவித்து நான்கு தினங்களுக்குப் பிறகு பி.டி.ஓ.,க்கள் இடமாறுதலும், தாசில்தார்கள் இடமாறுதல் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் பணிகள் மந்தமான நிலையில் உள்ளது.அரசியல் கட்சி பிரமுகர்களும், கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில் தொகுதியில் தேர்தல் களை கட்டவில்லை.