தினமலர் ஆசிரியர் மறைவுக்கு பிரமுகர்கள் இரங்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2021
23:08

பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன்: இதழியல் உலகம் மகத்தான ஆளுமையை இழந்து நிற்கிறது. பத்திரிகை கண்ணியத்தை எப்படி காப்பாற்ற வேண்டும்; எப்படி முறையாக நடத்த வேண்டும்; சமூக அக்கறையுடன் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் கிருஷ்ணமூர்த்தி உறுதியாக இருந்தார்.



ஒவ்வொரு செய்தியும் சமூக அக்கறையோடு வெளியிடப்பட வேண்டும் என உறுதியாக இருந்தார். நாணயவியலில் அவர் அளித்த பங்களிப்பால் பல சரித்திர சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டன. தன் அந்திம காலம் வரை இந்தப் பணியை செம்மையாகச் செய்தார். 'நாயகன்' நுால் வெளியீட்டு விழாவில் தான் அவர் கடைசியாக கலந்து கொண்டார். அந்த விழாவில் நுாலை நான் வெளியிட்டேன். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். கல்வியாளர் ரமேஷ்பிரபா: அவர் என்றைக்கும் எனக்கு ஆசிரியர். 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியில் அவருடன் நெருக்கமாக சில மணி நேரம் பேசும் வாய்ப்பு கிடைக்கும்.



பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. வயதையும் தாண்டி சிறந்த நண்பரை இழந்துள்ளேன். அமைச்சர் ஜெயகுமார்: 'தினமலர்' நாளிதழ் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியுடன் 1991ல் இருந்து நெருங்கி பழகி உள்ளேன். கலகலப்பானவர். மனிதனுக்கு ஆரோக்கியம் முக்கியம் என்ற நிலையில் வாழ்ந்தவர். அவரிடம் நிறைய கற்றுள்ளேன். 'வயது என்பது வெறும் எண்ணிக்கை தான்' என அவர் கூறுவார். பத்திரிகை துறையில் முத்திரை பதித்து வரலாற்றை உருவாக்கியவர். அவர் மறைவு பத்திரிகை துறைக்கு மட்டுமின்றி அனைவருக்கும் இழப்பாகும்.



முன்னாள் டி.ஜி.பி. திலகவதி: 'தினமலர்' நாளிதழின் முதுகெலும்பாக இருந்தவர். கன்னியாகுமரியில் துவக்கிய பத்திரிகையை சென்னைக்கு கொண்டு வந்து வெற்றிகரமாக நடத்தியவர். பழங்கால நாணயங்களை சேகரித்து அதன் வரலாற்றை ஆய்வு செய்து நுாலாக வெளியிட்டு தமிழுக்கு பெருமை சேர்த்தார். பழங்கால நாணயங்கள் வழியே சரித்திர உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ளார்.சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி: அய்யாவின் மறைவு அவரது குடும்பத்திற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் பேரிழப்பு.



பத்திரிகை துறையில் மிகப் பெரிய மறுமலர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டு வந்த ஜாம்பவான். அவரது சீரிய முயற்சியால் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியை மிகச் சிறந்த ஆசிரியர்களை வைத்து நடத்தினார். நான் மாநகராட்சி மேயராக இருந்த போது அதை நன்கு உணர்ந்தேன்.அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர்: நாணயவியல் பேரறிஞர். அனைவரிடமும் நாணயத்துடனும் நா நயத்துடனும் இனிமையாக பழகுபவர். மாணவ - மாணவியரின் கல்வியறிவு மேம்பட தமிழகம் முழுதும் 'ஜெயித்துக் காட்டுவோம்' என்ற நிகழ்ச்சியை நடத்தினார். அவரது இழப்பு தமிழினத்துக்கே பேரிழப்பு.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X