சேவை பெறும் உரிமைச் சட்டம் அமல்படுத்த வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2021
23:11

மதுரை : பொது சேவைகள் பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தாக்கலான வழக்கில் கூடுதல் ஆவணம் சமர்ப்பிக்க அறிவுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்தது.



திருச்சி பகளவாடி குருநாதன் தாக்கல் செய்த பொதுநல மனு:பொது சேவைகள் பெறும் உரிமைச் சட்டம் 20 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கென ம.பி., கோவாவில் தனித்துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு சேவைக்கும் காலவரம்பை மாநிலங்கள் பின்பற்றுகின்றன. உதாரணமாக ரேஷன் கார்டு வழங்க பல மாநிலங்கள் 30 நாட்கள் காலவரம்பு நிர்ணயித்துள்ளன.ஹரியானாவில் 15 நாட்களில் ரேஷன் கார்டு, 8 நாட்களில் மின் இணைப்பு, 7 நாட்களில் ஜாதிச் சான்று, நிலப்பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமத்திற்கு ஒரே நாள், குடிநீர், சாக்கடை இணைப்பிற்கு 12 நாட்கள் என குறைந்த காலவரம்பு அம்மாநில சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.



அரசின் சேவைகளை தகுதியுள்ளவர்கள் உடனடியாக பெற இச்சட்டம் வழிவகுக்கிறது. தமிழகத்தில் மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அரசுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. பலமுறை மனு செய்தாலும் தவறான, சம்பந்தமில்லாத தகவல்களை தருகின்றனர். இதை தவிர்க்க பொது சேவைகள் பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு, மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அறிவுறுத்தி மார்ச் 8 க்கு ஒத்திவைத்தது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X