பரமக்குடி நான்கு வழிச்சாலையில் இருள் ; வாகன ஓட்டிகள் தடுமாற்றம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
பரமக்குடி நான்கு வழிச்சாலையில் இருள் ; வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 மார்
2021
23:12

பரமக்குடி : மதுரை - பரமக்குடி நான்கு வழிச் சாலையில் நகர் சந்திப்பு ரோட்டில், மின்விளக்குகளின்றி இருளில் உள்ளது.



வாகன ஓட்டிகள் இரவில் தடுமாறும் நிலை ஏற்படுகிறது.மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்தது. பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து இருவழி சாலையாக தனுஷ்கோடி வரை செல்கிறது.இந்நிலையில் பரமக்குடி நகர் துவங்கும் இடமான தெளிச்சாத்தநல்லுார் விலக்கு ரோடு மற்றும் நகர் எல்லையான அரியனேந்தல் விலக்கு ரோட்டில் ஹை-மாஸ் விளக்கு அமைக்கப்படாமல் உள்ளது. மேலும் எந்த வகையான தெருவிளக்குகளும் இன்றி இருளில் உள்ளது.



இதனால் தொலைதூரத்திலிருந்து வரும் வாகனங்கள் இருளில் தவிப்பதுடன், முறையான வழிகாட்டும் பெயர் பலகைகள் இன்றி வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை உள்ளது. மேலும் அரியனேந்தல் பகுதியிலிருந்து பரமக்குடிக்கு நுழையும் இடம் முறைப்படுத்தப்படாமல் மேம்பாலத்திற்கு அடியில் கொண்டை ஊசி வளைவில் செல்லும்படி உள்ளது.பெண்கள் தனியாக இருள் சூழ்ந்த பகுதியில் ஒருவித பயத்துடன் செல்லும் நிலை நீடிக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட துறையினர் மின்விளக்குகளைபொருத்த உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X