மதுரை : மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் 'நிதி உங்கள் அருகில்' என்ற இணையவழி குறைதீர்க் கூட்டம் மார்ச் 10ல் நடக்கிறது.
மண்டல கமிஷனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது: மண்டல கமிஷனர் முன்னிலையில் நிறுவன முதலாளிகள் மற்றும் வைப்பு நிதி உறுப்பினர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.இக்கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் கூகுள் பிளே ஸ்டோரில் cisco.webex.meeting.gov.in செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து பங்கேற்கும் விவரத்தை ro.madurai@epfindia.gov.in என்ற அலுவலக மின்னஞ்சலுக்கு மார்ச் 9க்குள் அனுப்பவேண்டும். கூட்டத்தில் பங்கேற்பதற்கான தொடர்பு எண் தனியாக தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.