ராமநாதபுரம் : சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ராமநாதபுரம் பகுதியில் அரசியல்கட்சியினர் தங்களது சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க சுவர்கள்,ஆட்டோக்களில் விளம்பரம் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.
அனுமதி இல்லாமல் வரைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வேட்பு மனுதாக்கல் மார்ச் 12ல் தொடங்கி 19ல் நிறைவு பெறுகிறது. மார்ச் 20 ல் வேட்பு மனுக்கள்பரிசீலனையும், வேட்பு மனு திரும்ப பெற மார்ச் 22ல் நடக்கிறது. ஏப்.,6ல் ஓட்டுப்பதிவு, மே 2ல் ஒட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.வேட்பு மனுதாக்கல் தொடங்க ஒருவாரம் உள்ள நிலையில் ராமநாதபுரம் பகுதியில் அரசியல்கட்சியினர் தங்களது சின்னத்தை வரைய தற்போதேசுவர்களை கைப்பற்றும்முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
சிலர் தேர்தல் விதியைமீறி வாகனங்களில் கட்சி சின்னத்தை விளம்பரம் செய்கின்றனர். அவர்கள் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ராமநாதபுரம் தேர்தல் தாசில்தார் கார்த்திகேயன் கூறுகையில், இறந்த தலைவர்கள் படம், சிலைகளை அகற்ற தேவையில்லை. கட்சியினர் வாகன பிரச்சாரத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து முன் அனுமதி பெறவேண்டும்.வாகனங்களில் கட்சி சின்னங்களை வைத்து பிரச்சாரம் செய்ய அனுமதியில்லை, அம்மாதிரியான வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.