ராமநாதபுரம் : மாவட்டத்தில் மதுவிற்பனையை கண்காணிக்க சிறப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் ஏப்., 6ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பிப்., 26 மாலை முதல் அமலில் உள்ளது.இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தல், கடத்தல் ஆகியவற்றை தடுக்கவும், தினசரி மது விற்பனையை கண்காணிக்க பொறுப்பு கண்காணிப்பு சிறப்பு அலுவலராக டாஸ்மாக் உதவி மேலாளர் மகாதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.82480 57916 என்ற அலைபேசி எண்ணில் மது விற்பனை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.---