'வார விடுமுறை விடுங்க...' போலீஸ்காரர் கதறல் கடிதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2021
01:04

மதுரை:'வாரம் ஒருமுறை போலீசாருக்கு விடுமுறை விடுங்க... அதுவே என் கடைசி ஆசை' என, போலீஸ்காரர் ஒருவர், அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி, முகநுாலில் பதிவிட்டு தற்கொலைக்கு முயன்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மதுரை, அவனியாபுரம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் பொன்னுசெல்வம், 35. இவர், தெற்குவாசல் சட்டம் - ஒழுங்கு பிரிவில், போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இவரது மனைவி குறிஞ்சிமலர். இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.இந்நிலையில், பொன்னுசெல்வம், நேற்று காலை, தன் முகநுாலில் கடிதம் ஒன்றை வெளியிட்டார்.



அதில் கூறியிருப்பதாவது:என் சாவுக்கு மனைவியும், மாமியார் மீனாவும் தான் காரணம். என்னை மிரட்டி, என் அம்மாவிடம் செல்லக்கூடாது என, தடுக்கின்றனர். என் தங்கையிடம் பேசக்கூடாது என மிரட்டுகின்றனர். என் முழு சம்பளத்தையும் கேட்கின்றனர்.தர மறுத்தால், என் சட்டையைக் கழற்றி விடுவேன் என, மிரட்டு கின்றனர். இவர்களை போலீசார் தண்டிக்க வேண்டும்.



என் மீது வீண் பழி சுமத்துகின்றனர். என்னால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை.என் கடைசி ஆசை... போலீஸ் உயர் அதிகாரிகளையும், முதல்வர் ஐயாவையும் கேட்டுக் கொள்கிறேன். என் போன்ற அடிமட்ட போலீசார், மிகவும் கஷ்டப்படுகின்றனர்.அவர்க ளுக்கு, கேரளா போன்று சங்கம் தர வேண்டாம். ஆந்திரா போன்று சம்பளம் தர வேண்டாம். வாரம் ஒரு நாள் விடுமுறை அறிவியுங்கள். அதுவே, என் கடைசி ஆசை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.



இதைப் பார்த்த சக போலீசாரும், நண்பர் களும் அதிர்ச்சியடைந்து, நேரில் சென்றபோது விஷம் குடித்திருந்தார். உடனடியாக அவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, உடல்நலம் தேறி வருகிறார். இதற்கிடையே, அவரது முகநுாலில் வெளியான கடிதம், போலீஸ் உயர் அதிகாரி கள் அறிவுரைப்படி நீக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X