அபார்ட்மென்ட்களில் குடியேறுவதில்... அவஸ்தைகள் ஏராளம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2021
02:36

இ ன்றைய சூழலில், அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் அமைந்துள்ளதாக கூறி, அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விற்கும் நிலையில், குடும்பத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் இங்குள்ளது என்று கூறப்படுகின்றன.இதுபோன்ற திட்டங்களில் வீடு வாங்கியவர்கள் பலர், அவசரப்பட்டு அங்கு குடியேறிய பின் படும் அவஸ்தைகள் ஏராளம். உதாரணமாக, அப்பகுதியில் உள்ள பிரபல பள்ளிகளில் குழந்தைகளுக்கு இடம் பெற்று இருப்பார்கள்.அதனால், குழந்தைகளுக்கு நல்ல பள்ளிகளில் இடம் கிடைத்து விட்டதே என்று, பணிகள், 100 சதவீதம் முடியாத நிலையில், அடுக்குமாடி வீட்டில் குடியேறி இருப்பார்கள். இவ்வாறு, பணிகள் முடியாத நிலையில், குடியேறுவோர் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இதில், அபார்ட்மென்ட் வளாகத்தில் அனைத்து வீடுகளும் விற்பனையாகும் வரை கட்டுமான நிறுவனமே பராமரிப்பு பொறுப்பை ஏற்று இருக்கும். அவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு தான் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.அந்த வளாகத்துக்கு, நீண்டகால அடிப்படையில் எழும் தேவைகளை கருத்தில் கொள்ளாமல், அந்த சமயத்துக்கு, அவசர தேவைகள் என்ன என்று பார்த்து அதற்கான நடவடிக்கைகளை மட்டுமே எடுப்பார்கள். வளாகத்தை சுத்தம் செய்வது, தண்ணீர் வினியோகம், பாதுகாவலர் நியமனம் போன்ற விஷயங்களில் மட்டுமே நிறுவனங்கள் கவனம் செலுத்தும்.மேலும், இந்த நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள், பராமரிப்பு கட்டணங்களை வசூலிக்காது. சில இடங்களில் பராமரிப்பு கட்டணங்களை கட்டுமான நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இது போன்ற பணிகள் முடியாத திட்டங்களில் குடியேறுவோர், மின் வினியோகம், தண்ணீர் வினியோகம், குப்பை அகற்றம் போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பாக, பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.எனவே, முதலில், வீடு கிடைத்தது என்பதற்காக, அவசர கதியில் குடியேறுவோர், அங்குள்ள சூழல் குறித்து ஆராய்ந்து செயல்பட்டால் நல்லது. எத்தனை பெரிய, பிரபலமான நிறுவனமானாலும் சரி, அதில் வீடு வாங்குவோர், குடியேறும் முன், அதில் அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.குறிப்பாக, பராமரிப்பு பணிகளுடன், பாதுகாப்பு ரீதியாகவும் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர், கட்டுமான துறை வல்லுனர்கள்.நிறைவு சான்றிதழ் அடுக்குமாடி கட்டி முடிக்கப்பட்டதற்கு, கட்டுமான நிறைவுச் சான்றிதழை கட்டுனர் வாங்கி வைத்திருக்கிறாரா என்பதையும் கேட்டு வாங்க வேண்டும். சில இடங்களில் கட்டுனர்கள், கட்டுமான சான்றிதழ் வாங்கித்தராமல் விட்டு விடுவார்கள். வீடு வாங்குபவர்களும் கேட்காமல் விட்டுவிடுவார்கள். அப்பார்ட்மென்ட்டில் உங்களுடைய வீட்டின் சதுர அடி எவ்வாறு அளக்கப்பட்டுள்ளது, பொதுவான பயன்பாட்டு இடம், எவ்வளவு சதவிகித சதுர அடி உங்களின் பயன்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது, கார் பார்க்கிங் வசதி உள்ளதா, இரண்டு சக்கர வாகன நிறுத்துமிடம் போதுமான அளவில் உள்ளதா, விருந்தினர்களின் வாகனங்களை நிறுத்த வழி உள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X