மனமும், உடலும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2021
02:42

மனித வாழ்வில் வெற்றிபெற உடலும், மனமும் சேர்ந்து, சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். இரண்டில் ஒன்று சோர்ந்து போனாலும்கூட, நம்மால் சுமூகமாக இயங்க முடிவதில்லை. உடல் நலம் சரியில்லாததாலும், மனம் தொடர்பான பல பிரச்னைகளாலும் ஏராளமான பேர் வாழ்க்கையில் தோல்வியடைந்துள்ளனர். எனவே, உடல், -மனம் ஆகிய இரண்டையும் இணக்கமாக, அதேசமயம் சுறுசுறுப்பாக இயக்க வேண்டிய வித்தையை மாணவர்கள் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.சிலருக்கு, உடலில் சில நீண்டகால நோய்கள் இருக்கலாம். அதேபோன்று, சிலருக்கு இயல்பிலேயே மனச்சோர்வு, பய உணர்வு, கவலை போன்ற மனம் சார்ந்த சிக்கல்கள் இருக்கலாம். ஆனால், இவற்றால் ஒருவர் வாழ்க்கையில் தோல்வியடைய வேண்டியதில்லை. இந்த குறைபாடுகளை வெற்றிகொண்டு, வாழ்வில் சாதனைகள் பல படைக்கலாம்.சில எளிய பயிற்சிகளின் வாயிலாக, நாம் இதை சாதிக்கலாம். உடற்பயிற்சி என்றாலே, பல பெரிய உடற்பயிற்சி சாதனங்கள் உடைய 'ஜிம்' சென்று கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. மேலும், உடல் பயிற்சி கூடங்களில் அதிக நேரமும், உழைப்பும் தேவைப்படுகிறது. பயிற்சியை தொடர்ந்து செய்வது பலருக்கு சிரமமாகவும், எரிச்சலாகவும், நேரமின்றியும் இருக்கும். எனவே எளிமையான மற்றும் சிறந்த பயிற்சிகளே அனைவருக்கும் ஏற்றது.சிறந்த பயிற்சிகள்ஓடுதல், நீச்சலடித்தல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்றவை எளிமையான சிறந்த பயிற்சிகள். மரங்கள் அடங்கிய திறந்த வெளியில் பயிற்சியில் ஈடுபடுவது சிறப்பான பலனை தரும். இதன் வாயிலாக, உங்களுக்கு நிறைய ஆக்சிஜன் கிடைப்பதால் நினைவுத்திறன் அதிகரிக்கும். மேலும் இசையுடன் சேர்ந்து பயிற்சி செய்து பழகலாம். பயிற்சி செய்வது நமக்கு சிரமமான ஒன்றாகவே தெரியாது. நமது ஆர்வமும் அதிகரிக்கும். இதைத்தவிர, வலது, -இடது மூளை ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான மூளை பயிற்சியிலும் ஈடுபடலாம்.பயிற்சியானது, உங்களின் டென்ஷனை குறைத்து ரிலாக்சாக வைத்திருக்கிறது. உடற்பயிற்சியின் வாயிலாக, உங்களின் உற்சாகம் அதிகரிக்கிறது. இத்தகைய பயிற்சிகளை தொடர்ந்து செய்வது முக்கியம். நீங்கள் அதிக பலன் பெற்று, அந்த பயிற்சிகளுக்கு உங்களை அறியாமல் அடிமையாகி விடுவீர்கள். வாழ்க்கையிலும் வெற்றி பெறுவீர்கள்!

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X