வத்திராயிருப்பு:சதுரகிரி, சுந்தரமகாலிங்கம் கோவிலில், மாசி மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மார்ச், 10 முதல், 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு, 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். மாசி மஹா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச், 10, காலை, 7:00 மணி முதல் அமாவாசைக்கு மறுநாளான மார்ச், 14 மதியம், 12:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கபட உள்ளனர். பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு தங்குவதற்கும் அனுமதி கிடையாது.