ரயில் பயணியிடம் ரூ.1.75 லட்சம் பறிமுதல் | சென்னை செய்திகள் | Dinamalar
ரயில் பயணியிடம் ரூ.1.75 லட்சம் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 மார்
2021
04:27

சென்னை : உரிய ஆவணமின்றி ரயிலில், பயணி கொண்டு வந்த, 1.75 லட்சம் ரூபாயை, சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.



ஆந்திரா மாநிலத்திலிருந்து நேற்று, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த, பினாக்கினி எக்ஸ்பிரஸ் ரயிலில், கூடூரைச் சேர்ந்த சென்னையா, 53, என்பவர் வந்தார். wஅவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்த போது, ஆவணங்களின்றி, 1 லட்சத்து, 75 ஆயிரத்து, 500 ரூபாய் வைத்திருந்தது தெரிந்தது.



விசாரித்ததில், கூடூரில் பேன்ஸி ஸ்டோர் வைத்திருப்பதாகவும், அதற்கு பொம்மைகள், பேன்ஸி பொருட்கள் வாங்க வந்ததாகவும் கூறினார். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து, துறைமுகம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X