சென்னையில் பொது இடங்களில் விளம்பரங்கள் வைக்க தடை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2021
04:29

சென்னை : 'சென்னை மாவட்டத்தில், சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது' என, மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.



இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை மாவட்டத்தில், அரசு கட்டடங்கள், பொதுத்துறை கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில், சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், விளம்பர பதாகைகள், கொடி மற்றும் தோரணங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



தனியார் இடங்களில் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், விளம்பர பதாகைகள், கொடி மற்றும் தோரணங்கள் அமைத்திருப்பின், சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளரிடம் சொந்த விருப்பதின் அடிப்படையில், எழுத்துப்பூர்வமாக முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.



இந்த விளம்பரங்களில், ஒரு குறிப்பிட்ட நபரையோ, சமூகத்தையோ, உணர்ச்சிகளை துாண்டும் வகையிலான வாசகங்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது. விளம்பரங்களில், வேட்பாளரின் பெயர், புகைப்படம், வேட்பாளர் குறித்த வாசகங்கள் இடம் பெற்றிருந்தால், வேட்பாளரின் தேர்தல் செலவினத்தில் சேர்க்கப்படும்.



குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர், விளம்பரங்கள் அமைக்கப்பட்டுள்ள இடம், செலவின விளம்பரங்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் தேர்தல் செலவின பார்வையார்களுக்கு, மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விளம்பரங்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலோ, பொது இடத்தில் இருந்தாலோ, குறிப்பிட்ட வேட்பாளரின் அனுமதியின்றி அமைக்கப்பட்டாலோ, விளம்பரங்கள் அமைத்த நபர்கள் மீது, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.



சென்னை மாவட்டத்தில் அரசு, அரசு சார்ந்த கட்டடங்கள், பொது துறை கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், விளம்பர பதாகைகள், கொடி மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டால், அவை உடனடியாக அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X