மதுரை : மதுரை விவசாய கல்லுாரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிழக்கு வட்டார வருவாய் விவசாயிகளுடன் மூன்று மாத களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொல்லங்குடி கிராமத்தில் நாட்டுரக கத்தரிக்காயின் விதைகளை குழித்தட்டு நாற்றாங்கால் முறையில் விவசாயிகளுக்கு தயார் செய்தனர். மாணவிகள் சஞ்சலா, டி.தீபிகா, பூமிகா, ஆர்.தீபிகா, சிரின், ஸப்ரின் ஆகியோர் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.