புதுச்சேரி- கதிர்காமம் தொகுதி காங்., பிரமுகர் கே.எஸ்.பி. ரமேஷ் என்.ஆர்.காங்., கட்சியில் இணைந்தார்.என்.ஆர். காங்., தலைவர் ரங்கசாமியின் ஆதரவா ளராக இருந்த கே.எஸ்.பி. ரமேஷ் கட்சி தலைமை மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமல் விலகி இருந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பிறகு காங்., கட்சியில் இணைந்தார்.இந்நிலையில் கே.எஸ்.பி. ரமேஷ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கதிர்காமம் முருகன் அடியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.சட்டசபை தேர்தல் நிலைபாடு குறித்து ஆதரவாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.பின் அவர் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகள் காங்., கட்சியில் இருந்தேன் எனக்காக உயிரையே கொடுக்கும் தொண்டனுக்கு ஒரு கல்விக் கடன்கூட பெற்றுத்தர முடியவில்லை. வரும் சட்டசபை தேர்தலில் தொகுதி மக்களின் விருப்பப்படி போட்டியிடுவேன். எந்த கட்சியில் போட்டிடுவேன் என்பதை இன்னும் இரண்டு, நாட்களில் அறிவிப்பேன், என்றார்.இந்நிலையில் திலாஸ்பேட்டையில் உள்ள அப்பா பைத்தியம்சாமி கோவிலுக்குச் சென்று என்.ஆர். காங்., தலைவர் ரங்கசாமியை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார். வன்னியர் பேரியக்கத் தலைவர் செந்தில் உடன் இருந்தார்.