செம்பட்டி : அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் கிருஷ்ணசாமி 50. இவருக்கும் இதே ஊரில் வசிக்கும் இவரது அண்ணன் ராமகிருஷ்ணனுக்கும் முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் கிருஷ்ணசாமி உறவினர்கள் சிலருடன் சேர்ந்து ராமகிருஷ்ணன், அவரது மனைவி சிவகாமியை தாக்கியதில் காயம் அடைந்தனர். தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.இதையடுத்து, செம்பட்டி போலீசார் கிருஷ்ணசாமியை கைது செய்தனர். அவரது உறவினர்கள் செல்வி, கிருத்திகா, கோபிகா ஆகியோரை தேடி வருகின்றனர்.