புதுச்சேரி- புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முத்தரையர்பாளையம் தர்மாபுரி ஸ்ரீராம் திருமண நிலையத்தில் நேற்று நடந்தது.புதுச்சேரி மாநில காங்., செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.டி., ஆறுமுகம், இந்திரா நகர் தொகுதியில் காங்., வேட்பாளராக மூன்றுமுறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இந்நிலையில் ஆறுமுகம் காங்., கட்சியில் நீடிப்பாரா, பா.ஜ., உள்ளிட்ட மாற்றுக் கட்சிக்கு செல்வாரா என தொகுதி மக்களிடம் விவாதம் நடந்து வந்தது. இந்திரா நகர் தொகுதி காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆறுமுகம் தலைமையில் நடந்தது.அப்போது அவர் பேசுகையில், இந்திரா நகர் தொகுதியில் கடந்த மூன்று முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். வரும் சட்டசபை தேர்தலில் மாற்றுக் கட்சிக்கு செல்ல இருப்பதாக தொகுதி மக்களிடையே கருத்து நிலவி வருகிறது. எனது தொகுதி மக்களின் விருப்பப்படியே நடந்து கொள்வேன். நீங்கள் விரும்பினால் வரும் தேர்தலில் போட்டியிடுவேன். இல்லை எனில் போட்டியிட மாட்டேன், என்றார்.அப்போது அவரது ஆதரவாளர்கள், காங்., கட்சியிலேயே போட்டியிடுங்கள் உங்கள் வெற்றிக்கு நாங்கள் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றுவோம் என்றனர். கூட்டம் முடிந்து வெளியே வந்த ஆறுமுகத்தை வைத்திலிங்கம் எம்.பி., சந்தித்து ஆலோசனை நடத்தினார்.