காரைக்கால்- காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கலெக்டர் அர்ஜூன் சர்மா தலைமை தாங்கி பேசுகையில், ஓட்டுச் சாவடிகள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க வேண்டும், என்றார். தேர்தல் தொடர்பான அனைத்து நோடல் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். தேர்தல் நடத்தும் துணை அதிகாரி ஆதர்ஷ், துணை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பங்கேற்றனர்.